2025 மே 07, புதன்கிழமை

தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் பார்வையிட்ட பின் கட்டடங்கள் அமைக்க அனுமதி

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 09 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவில் கட்டடங்களை கட்டுவதற்கான அனுமதி வழங்கும்போது, அவற்றுக்குரிய இடங்களை தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் பார்வையிட்ட பின்னரே அனுமதி வழங்கவேண்டுமென அப்பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

பிழையான அனுமதி மூலம் கட்டப்பட்ட கட்டடங்களை உடைக்கவேண்டிய நிலைமை உருவாகலாமெனவும்  அவர் கூறினார்.  

மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபையினால் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டு அமைக்கப்பட்ட கொங்கிறீட் வீதிகள், சுற்றுமதில்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து இதுவரையில் 50  முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மழைக்காலத்தில் ஓடமுடியாதவாறு வளவுகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் கூறியதாகவும் அவர் கூறினார்.

களுவாஞ்சிக்குடி பொது விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, அம்மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (09) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் நேரில் சென்று பார்வையிடாமல் கட்டடங்கள் அமைப்பதற்கு பிரதேச சபை அனுமதி வழங்குகின்றது. இதனால் பல பிரச்சினைகள் உருவாகின்றன.  இவ்வாறான பிரச்சினைகளுக்கு பிரதேச சபையே பொறுப்புக் கூறவேண்டும்' என்றார்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X