Gavitha / 2016 நவம்பர் 21 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
'வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால், ஏறாவூரில் நடாத்தப்பட்ட நடமாடும் சேவை, வெறும் கண்துடைப்பாகும்' என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழுள்ள வேலைவாய்ப்பு பணியகத்தால், ஏறாவூரில், ஞாயிற்றுக்கிழமை (20) நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக, திங்கட்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'ஞாயிற்றுக்கிழமை (20) நடத்தப்பட்ட இந்த நடமாடும் சேவையானது, மக்களை ஏமாற்றும் செயலாகவே காணப்பட்டது. இதற்கு மக்கள் சரியான முறையில் அழைக்கப்படவில்லை. வெளிநாட்டில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 9,500 பேர் தொழில் புரிந்து வருகின்றனர். அதே போன்று ஏறாவூரைச் சேர்ந்த 1,482 பேரும் வெளிநாட்டில் தொழில் புரிகின்றனர். இவ்வாறு பணிபுரியும் அனைவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். சம்பளம் கிடைக்கப்பெறாமை, அவர்களது தகவல்கள் குடும்பங்களுக்கு கிடைக்காமை, தாய்நாட்டுக்கு திரும்ப முடியாமை, உரிய வேலை கிடைக்காமை, துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றமை மற்றும் கொடுமைப்படுத்தப்படுகின்றமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன' என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
'இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருபவர்களின் குடும்பங்கள், இதில் கலந்துக்கொண்டு அவர்களது பிரச்சினைகளை தெரிவிப்பதற்கான வசதிகள் செய்துகொடுத்திருக்கப்படவுமில்லை. வெறும் பத்து பேரே இதில் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது' என்றும் அவர் தெரிவித்தார்.
'எனவே, நடாமடும் சேவை என்ற போர்வையில் மக்களை ஏமாற்றாமல் ஒழுங்கான முறையில் நடமாடும் சேவைகளை ஒழுங்குபடுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நன்மைகளை மக்கள் பெற்றுக்கொள்ள வழிசெய்ய வேண்டும்' என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
50 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
21 Dec 2025