Suganthini Ratnam / 2016 ஜனவரி 08 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
ஸ்திரமடைந்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்காலத்திலும்; ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பை கிராமிய மட்டத்திலிருந்து வழங்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனிபா தெரிவித்தார்.
பேதங்களை மறந்து அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள், சமூக, சமய பிரதேச முக்கியஸ்தர்கள் அனைவரும் இவ்விடயத்தை சிரமேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.
நல்லாட்சிக்கான ஓராண்டுப் பூர்த்தியையொட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு, மீரா முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'சமூக நல்லிணக்கத்தோடு ஊழல்கள், இலஞ்சமற்ற சூழ்நிலையில் இந்த நாடு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற எண்ணக்கருவோடு புதிய ஆட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது.
இந்த நாட்டு மக்கள் பல்வேறுபட்ட துயரங்களை அனுபவித்துக்கொண்டு ஒரு மாற்றம் ஏற்படாதா என்று ஏங்கிக்கொண்டிருந்த சூழ்நிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்ட இந்த நாளை எல்லோரும் நினைவுகூர வேண்டும். இந்த நாட்டின் மக்களுடைய வாழ்க்கை மற்றும் கலாசார ரீதியில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தும் நாளாக இதை மாற்ற வேண்டும்.
பல சமூகங்களுக்கு மத்தியிலே ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும். அதனூடாக இந்த நாட்டினைக் கட்டியெழுப்புவோம் என்ற எண்ணக்கருவினை தற்போது நாங்கள் உருவாக்கியுள்ளோம்' என்றார்.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago