Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நாகரிகமான அரசியல் கலாசாரத்தை பின்பற்ற வேண்டுமென்று அவருக்கு ஆலோசனை கூற தான் விரும்புவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்த அவர், 'நான் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சராக இருந்தபோது எனது முயற்சியினாலும் நான் செய்த சிபாரிசின் அடிப்படையிலும் காத்தான்குடியில் 04 பாடசாலைகளுக்கு ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. இவற்றுக்கான அடிக்கல்லை நானே நாட்டினேன்.
கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிந்ததன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது, காத்தான்குடி அல்ஹிறா மற்றும் காத்தான்குடி அந் நாசர், காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயங்களின் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை திறந்துவைத்தேன். ஆனால், தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்த ஆய்வுகூடத்தை திறந்து வைத்துள்ளார். இது முதலமைச்சரின் அரசியலில் கீழ்த்தரமான அரசியலை காட்டுகின்றது' என்றார்.
'இன்னொருவரின் முயற்சியால் கட்டப்படுகின்ற கட்டடத்தை முதலமைச்சர் திறந்துவைப்பது நாகரிகமானது அல்ல.
இந்த கீழ்த்தரமான அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும். இவ்வாறான அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனது 25 வருட அரசியல் அனுபவத்தில் அரசியல் நாகரிகத்துடன் அரசியல் செய்து வருகின்றேன்.
எனவே எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் தவிர்ந்து கொள்ள வேண்டும் என ஆலோசனை கூற விரும்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025