Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
இலங்கையில் நான்கு பெண்களில் ஒரு பெண் 18வயதினை அடையும் முன்னர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் இணைப்பாளர் திருமதி எஸ்.சுமி தெரிவித்தார்.
'பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம்'எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் 10நாள் செயற்பாட்டு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை(11) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அதிகாரசபை, பால்நிலை அடிப்படையிலான வன்முறையை குறைக்கும் செயலணியுடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் அமைப்புகள்; இந்நிகழ்வினை நடத்தினர். இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
'தவறிழைத்தவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பி சுதந்திரமாக நடமாடும் கலாசாரமொன்று நடைபெற்றுவருகின்றது. இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அண்மைக்கால அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
2013ஆம் ஆண்டு அறிக்கையின்படி பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகளவில் அறிக்கையிடப்பட்டுள்ளன.
இலங்கையில் 60வீதமான பெண்கள் வீடுகளில் இடம்பெறும் வன்முறைகளினால் துன்பங்களை அனுபவிக்கின்றனர்' என்றார்.
இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.ஏ.ரஹுமான், மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன், பட்டிப்பளை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
30 minute ago
32 minute ago
51 minute ago