Yuganthini / 2017 மே 14 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ், எம்.எம்.அஹமட் அனாம்
“மக்களுக்கு நான் செய்யும் உதவி, இலஞ்சம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்தால், ஏனைய அரசியல்வாதிகள் வழங்கும் உதவிகளை என்ன என்று சொல்வது?” என, ஐக்கிய தேசியக் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன், கேள்வியெழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு - வாழைச்சேனை நந்தவனம் விருந்தினர் விடுதியில் நேற்று (13) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
"நாடாளுன்ற உறுப்பினர்களான சதாசிவம் வியாழேந்திரனும் சீனித்தம்பி யோகேஸ்வரனும், எதனோல் தொழிற்சாலையையும் என்னையும் தொடர்புபடுத்திப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
"மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால், எதிர்வரும் தேர்தல்களின் ஓர் ஆசனத்தையாவது ஐக்கிய தேசியக் கட்சி பெறவேண்டும் என்பதற்காக, நாங்கள் முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறோம். அதற்காக, மக்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறோம். மேலும் உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளேன். இதற்கும் எதனோல் தொழிற்சாலைக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை.
6 minute ago
9 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
16 minute ago