Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இந்த நல்லாட்சி காலத்தில் கூட தமிழ் மக்களின் நிலங்கள் பறிபோய்க்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் பண்டைய கிராமங்களில் ஒன்றாக கருதப்படும் அம்பிலாந்துறையை சேர்ந்த முருகுதயாநிதி எழுதிய 'அம்பிலாந்துறை' நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அம்பிலாந்துறையில் நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வெள்ளையருடன் போர்கள் இடம்பெற்றபோது அதற்கான பங்களிப்பினை அந்த காலத்தில் அம்பிலாந்துறையில் இருந்தும் வழங்கப்பட்டுள்ளது.
ஒருநாட்டின் வரலாறு என்பது,ஒரு சமூகத்தின் வரலாறு என்பது அந்த வரலாற்றில் உள்ள மக்களை வைத்தே ஆய்வுசெய்யப்படவேண்டும். வரலாற்று ரீதியான, மரபுரீதியான, கலாசார ரீதியான பல விடயங்கள் இல்லாமல் சென்றுகொண்டிருக்கின்றன.
இந்தவேளையில் எங்களை நாங்கள் அறியவேண்டும்.அதற்காக வரலாற்று நூல்களை வெளிக்கொணரவேண்டிய தேவையுள்ளது.நாங்கள் வரலாறு தெரியாதவர்களாக இருப்போனால் எங்களது வரலாறு மறைக்கப்படும்,அதனை இன்னொரு இனம் மறைக்கும் நிலையும் ஏற்படும்.
இன்று எமது அடிப்படை அரசியல் பிரச்சினை என்பதும் அடிப்படை வரலாறு என்பதும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையென்பதும் பின்னிப்பிணைந்துள்ளது.இங்குள்ள பிரச்சினையென்பது சர்வதேச மயப்படுத்தப்பட்டநிலையில் இருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதியான கிராமமாக இந்த அம்பிலாந்துறை பார்க்கப்படுகின்றது.எந்த கிராமத்திற்கும் இல்லாத சிறப்பு இந்த அம்பிலாந்துறைக்கு உள்ளது' என்றார்.
14 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
34 minute ago