2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'பயிற்சி நிலையக் கட்டடத்தை மீள கையளிக்கவும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த இரண்டு வருடங்களாக அம்பாறை மாவட்ட செயலக நிர்வாகத்தின் கீழுள்ள சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை நிறுவனத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குரிய பயிற்சி நிலையக் கட்டடத்தை மீள ஒப்படைக்குமாறு சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை நிறுவனம் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ஏ.எல்.மீராசாகிப் மற்றும் அதன் தேசிய நிர்வாக செயலாளர் ஏ.பாறூக் ஜாயா உட்பட அதன் முக்கியஸ்தர்கள் இன்று(15) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை மாவட்ட செயலகத்தில் வைத்து சந்தித்து இந்தக் வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ஏ.எல்.மீராசாகிப்,

சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை நிறுவனத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குரிய பயிற்சி நிலையக் கட்டடம் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை சென்னன் கிராமத்திலுள்ளது.

7.10.2013 அன்று இக்கட்டடம் இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த டொக்டர் பாலித ரண்தெனிய என்பவரினால் அம்பாறை மாவட்ட அன்றைய அரசாங்க அதிபராக இருந்தவரிடம் கையளிக்கப்பட்டது.

இந்தக் கட்டடம் அவருடைய தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக கையளிக்கப்பட்டது.

இன்று அந்தக் கட்டடம் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை நிறுவனத்துக்கு தேவையாகவுள்ள நிலையில், இதை மீள எமது நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு அம்பாறை மாவட்ட தற்போதைய அரசாங்க அதிபர் ரி.சுசித, பி வணிகசிங்கவை நேரடியாக சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் இக்கட்டிடத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதன்போது, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதனும் கலந்துகொண்டார் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X