2025 ஜூலை 21, திங்கட்கிழமை

'பல்லின கலாசாரம், பண்பாடு இணைந்தால் நிரந்தர சமாதானம் கிட்டும்'

Suganthini Ratnam   / 2016 மே 12 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

இந்த நாட்டில் வாழ்கின்ற பல்லின மக்களின் கலாசாரம், பண்பாடு இணைவதன் மூலமே நிரந்தர சமாதானக் காற்றை சுவாசிக்க முடியும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் சுமார் ஒரு கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத் திறப்பு விழா  வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'நாடு சமாதானத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நாட்டு மக்கள் தங்களுடைய கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடன் இணைந்து நிரந்தர சமாதானத்தை உருவாக்க வேண்டும்' என்றார்.

'பேதம் காட்டி பிரித்து சதி செய்து இனிமேலும் இந்த நாட்டைச் சீரழிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது' எனவும் அவர் கூறினார்.

'கடந்த காலத்தில் எமது நாட்டில் ஆட்சியாளர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில்; மேற்கொள்ளப்பட்ட அரசியல் யாப்பு சீர்திருத்தங்களின்போது, மக்களின் அபிப்பிராயங்கள் பெறப்;படவில்லை. ஆனால், தற்போது சகல மட்டங்களிலும் மக்களின் அபிப்பிராயங்கள் பெறப்பட்டு அவர்களின் பிரச்சினைகளில் அக்கறை காட்டி அரசியலமைப்பு அமைய வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் புரிந்துணர்வுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

எமது நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களும் புரிந்துடணர்வுடனும் சந்தோஷமாகவும் வாழும் வகையில் தீர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X