2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'புதன்கிழமை தோறும் பிரதேச செயலக வளாகத்தில் சந்தை'

Niroshini   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

இயற்கை பசளைகளைப் பாவித்து உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகளை விற்பனை செய்யும் நோக்கோடு பிரதி புதன்கிழமை தோறும் பிரதேச செயலக வளாகத்தில் சந்தைப்படுத்தவுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா தெரிவித்தார்.

வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் சமுர்த்தி பயனால் இயற்கை உரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்த மரக்கறிகள் மற்றும் பழங்களின் சந்தை இன்று புதன்கிழமை (07) மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூர் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கோடு திவிநெகும திணைக்களத்தின் ஆலோசனைக்கமைவாக புளியந்தீவு சமுர்த்திப் பயனாளிகளின் நன்மை கருதி சந்தை வாய்ப்பு, உற்பத்தி ஊக்குவிப்பு, வாழ்வாதார மேம்பாடு,இயற்கை பசளை பாவனையை ஊக்குவித்தல் போன்ற செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

அரச சேவையில் உள்ள உத்தியோகத்தர்கள்,மாநகர சபையில் உள்ள உத்தியோகத்தர்கள் இலகுவாக தாங்கள் வீடுகளுக்கு செல்லும் வழியில் குறித்த சந்தை அமைக்கப்பட்டுள்ளதால் இலகுவாக இரசாயனப் பொருட்கள் அற்ற மரக்கறி மற்றும் பழங்களைப் பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் செயலாகவும் அமையும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X