2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'பொதுமன்னிப்பளிக்கும் விடயம் தொடர்பில் ஆலோசிக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் விடயம் தொடர்பாக அரசாங்கம் ஆலோசிக்க வேண்டும். இதை எங்களுடைய மனிதாபிமானச் செய்தியாக மற்றவர்களுடைய மனதினைச் சென்றடைந்து அவர்களின் மனதிலே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
 
கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபையில் இன்று வெள்ளிக்கிழமை  ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  'எமது தமிழ் கைதிகள் தங்களின் விடுதலை கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கொள்கைத்திட்டமொன்றை வகுக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்குள்ளது. ஆனால், உடனடியாக தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் காணப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக எங்களது தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் இன்று நீதியமைச்சரை சந்திக்கவிருக்கிறார்கள். நல்லதொரு முடிவு ஏற்பட வேண்டும் என நாங்கள் பிரார்த்திப்போம். சிறையில் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபடுபவரகள் சிறை வாசத்தை அனுபவித்துவிட்டார்கள்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X