Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
'இந்தப் புதிய ஆட்சி மூலம் எமது இனப் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படுமென்று எதிர்பார்த்துள்ளோம். புதிய ஆட்சியை ஏற்படுத்துவதற்கு எந்தளவுக்கு முயற்சிக்கப்பட்டதோ, அந்தளவுக்கு இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாம் காண்கின்றோம்' என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு சக்தி பாலர் பாடசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'போராட்டம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில் இழந்த எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சர்வதேசத்துடன் இணைந்து இராஜதந்திரப் போராட்டத்தை மேற்கொண்டு வருவதுடன், எமது பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கும் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கான அரசியலையும் முன்னெடுத்து வருகின்றது.
போராட்டம் முடிவுக்கு வந்ததிலிருந்து கடந்த ஆண்டு ஜனவரி எட்டாம் திகதிவரை காட்டு ஆட்சி நடைபெற்றது. இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் வந்தபோது, சிறுபான்மையினமான நாங்கள் அந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து புதிய ஆட்சியை ஏற்படுத்தினோம்.
இந்த நல்லாட்சி அரசாங்கம் எங்கு இரகசிய முகாம்கள் உள்ளன, எமது மக்கள் எங்கு இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உடனடியாக கண்டறிய வேண்டும். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
காணாமல் போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் த.தே.கூ. தலைவரினால் விசேட பிரேரணை ஒன்று நடத்தப்படவுள்ளது. அதன் பின்னர் அரசாங்கம் தீர்க்கமான முடிவை எடுத்து இரகசியமாக தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும். கொல்லப்பட்டிருந்தால் அது தொடர்பான சரியான தகவல்களை வழங்க வேண்டும்.
இந்த ஆண்டுக்குள் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு வழங்கப்படுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்தத் தீர்வைக் குழப்புவதற்கு கடந்த காலத்தில் இந்த நாட்டை ஆட்சி செய்த மஹிந்த தரப்பினர் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர்.
இந்த நாட்டில் இருக்கும் அரசாங்கம் வட, கிழக்கு மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்;வைக் கொண்டுவரும் வகையில் மக்களின் கருத்துகளை அறியும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
நாங்கள் இன்று சமஷ்டியை நோக்கி நிற்கின்றோம். இந்த நாட்டின் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு சமஷ்டி தீர்வு வழங்கப்பட வேண்டும். ஒற்றையாட்சி முறை இந்த நாட்டில் இருக்கக்கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்த வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
7 hours ago
8 hours ago