2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் முன்மாதிரியாக வாழ வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சமூகத்தில் ஒதுங்கி தனிமைப்பட்டு இருக்காது, முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் எனத்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளிக் குடும்பமொன்றுக்கு சுயதொழில் நடவடிக்கைக்கு உதவி வழங்கும் நிகழ்வு முறக்கொட்டாஞ்;சேனையில் இன்று (10) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'கடந்த 3 தசாப்தகால யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; பல உயிரிழப்புகள், உடைமை இழப்புகள், அங்கவீனங்கள் என்று  அழிவுகளே மிஞ்சி நிற்கின்றன

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் 11 ஆயிரத்து 900 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் 3,200 பெண் போராளிகளும் அடங்குகின்றனர். முன்னாள் போராளிகளான புனர்வாழ்வு பெற்ற பெண்களின் நிலைமையும் மிகவும் வேதனையானது' என்றார்.  

'மேலும், அங்கவீனமான முன்னாள் போராளிகளின்   வாழ்வாதாரத்துக்காக கடந்த அரசாங்கமும்  தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் எந்தவிதத்  திட்டங்களையும் முன்வைக்கவில்லை.  புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டு இயல்பு வாழ்;க்கைக்குத் திரும்பிய இவர்கள், தங்களின் நாளாந்த ஜீவனோபாயத்துக்காக மிகவும் சிரமப்படுகின்றார்கள்' எனவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .