2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பால்வாத்த ஓடை கால்வாய் தோண்டப்பட்டது

Niroshini   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி கடற்கரையை அண்மித்த பால்வாத்த ஓடை கால்வாயை துப்பரவு செய்யப்பட்டு இன்று புதன்கிழமை தோண்டப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி பகுதியில் ஏற்படும் வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையிலேயே காத்தான்குடி கடற்கரையை அண்மித்த பால்வாத ஓடை எனப்படும் கால்வாயை துப்பரவு செய்து அது தோண்டப்பட்டுள்ளது.

இந்த பால்வாத்த ஓடை தோண்டப்பட்டதையடுத்து வெள்ள நீர் கடலுக்கு ஓடுகின்றது.

அத்துடன் காத்தான்குடி நகர சபை பிரிவில் அடைக்கப்பட்டு நீர் வடிந்தோடமுடியாமல் காணப்பட்ட வடிகான்கள் மற்றும் சின்னத்தோனா, பெரிய தோணா ஆகிய கால்வாய்களில் வெள்ள நீர் வடிந்தோடும் வகையில் நகர சபையின் ஊழியர்களினால் துப்பரவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X