Kogilavani / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'மாகாண சபை உறுப்பினர்களுக்கு, நவம்பர், டிசெம்பர் மாதங்களுக்கான கொடுப்பனவு இன்னமும் கிடைக்காதப் போதிலும் மக்களுக்கான அபிவிருத்தி பணத்தை, எங்கிருந்தாவது தேடி காலடிக்குக் கொண்டு வருகின்றோம்' என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் மிச்நகர், மீராகேணி, ஆறுமுகத்தான்குடியிருப்பு, ஏறாவூர் நகர் மற்றும் செங்கலடி உள்ளிட்ட பல ஊர்களை, மாரிகால வெள்ளப்பாதிப்பிலிருந்து காப்பதற்காக, 36 மில்லியன் ரூபாய் செலவில் வடிகால் அமைக்கப்படவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,
'இப்பிரதேச மக்கள், மாரிகாலத்தில் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவரும் வெள்ளப்பாதிப்பைத் தடுக்க நாம் அவசரமாக எடுத்த முயற்சிக்கு பயன் கிட்டியுள்ளது.
இடர் முகாமைத்துவ அமைச்சின் 36 மில்லியன் ரூபாய் நிதியளிப்புடன் வேலைகள,; உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முக்கியமான வேலைத்திட்டங்களுக்குக் கூட அரசாங்கத்தால் நிதி அளிக்கப்படாமல் இருக்கின்ற வேளையிலும் நாம் மக்களின் தேவைகளையும் குறைகளையும் பிரச்சினைகளையும் முதனிலைப்படுத்தி, அவற்றுக்கான நிதிகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நிதிகளைக் கொண்டு வந்து மக்களின் நலன்களைக் கவனிக்கின்றோம்.
மாகாண சபை உறுப்பினர்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களுக்கான சம்பளம் இன்னும் வந்து சேரவில்லை.
எவ்வாறாயினும் நாம் சளைத்துப் போகாமல் மக்களின் அபிவிருத்தியில் குறியாக இருக்கின்றோம்.' என்றார்.

4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago