2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்பு தேரர் ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்தீபு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ். பாக்கியநாதன்

வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கின்ற வேளையிலும் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த அங்குள்ள பிக்கு, இன்று சனிக்கிழமை (03) பிற்பகல் முயற்சி மேற்கொண்டதால் மட்டக்களப்பு நகரில் சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

மட்டக்களப்பிலுள்ள மங்களராம விஹாரைக்கு பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மேற்கொள்ள முயற்சித்த வேளையில் அவரது பயணம் மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வேளையிலேயே மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டத்துக்கு முயற்சித்த வேளையில் பொலிஸார் முழுமூச்சாக குறித்த ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மங்களராம விஹாரையைச் சூழவிருந்த கடைகள் பூட்டப்பட்டன. போக்குவரத்து சேவையும் சற்று நேரம் பாதிக்கப்பட்டது. பயணிகள் பதற்றமடைந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X