2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களிலும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப்; பணிப்பாளர், வைத்தியக் கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார்.

கடந்த வருடத்தில்; மொத்தமாக 501 டெங்கு நோயாளர்களே மட்டக்களப்பில் அடையாளம் காணப்பட்டிருந்தார்கள்.
ஆனால், இந்த வருடத்தில் ஜனவரியில் 306 பேரும் பெப்ரவரியில் 479 பேரும் மார்ச்சில் 746 பேருமாக மொத்தம் 1,531 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.

தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 94 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் எனவும் அவர் கூறினார்.

இதற்கு முன்னர் சாதாரண காலத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களில்  நாளொன்றுக்கு 300 தொடக்கம் 350 பேர் வரையே இரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள்.

ஆனால், தற்போது நாளொன்றுக்கு 950 தொடக்கம் 1,000 பேருக்கு இரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .