Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை காணப்பட்டு வருகின்றது. எனவே, மட்டக்களப்பு மேற்கு வலயத்தை சொந்த இடமாகக் கொண்ட ஏனைய மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களை இங்கு நியமனம் செய்வதன் மூலம் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையைத் தீர்க்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அபிவிருத்தி குறித்து கருத்துத் தெரிவிகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், 'வேறு மாவட்டங்களில் கடமையாற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை அப்பிரதேசங்களுக்கு இடமாற்றுவதன் மூலம் அங்கு நிலவும் கல்விப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் கஷ்டப் பிரதேசமான மட்டக்களப்பு மேற்குப் பிரதேசத்தில் பணியாற்றுவதற்கு விரும்புவதுமில்லை. தொடர்ந்தும் பணியாற்றுவதுமில்லை. அதனால் அந்தப் ;பிரதேசங்களைச் சேர்ந்தவர்களையே இப்பிரதேசங்களுக்கு நியமித்தால் அவர்களது சொந்த இடங்களிலேயே நிரந்தரமாக பணியாற்றுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.
எனவே மாகாணக் கல்விப்பணிப்பாளர் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025