2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'முகாமுக்குள் வைத்தே எனது கணவரைப் பிடித்தனர்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

'வைத்தியசாலைக்குச் சென்றுவரும்போது போரதீவு எனும் இடத்தில் நின்ற விசேட அதிரடிப்படையினர், புத்தகமொன்றைக் கொடுத்து, இதைத் தமது முகாமில்  கொடுத்துவிடுமாறு அனுப்பிவைத்துவிட்டு, முகாமுக்குள் வைத்து எனது கணவரைப் பிடித்துள்ளார்கள். இந்நிலையில், எனது கணவர் பற்றிய தகவலை அறிவதற்காக இன்றுவரை தவியாய்த் தவிர்க்கின்றேன்' என த.பவானி தெரிவித்தார்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் இறுதி அமர்வு, பட்டிப்பளை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'எனது கணவர் காணாமல் போன தினமான 2008.12.20 அன்றிலிருந்து பல அரச அமைப்புகளிடமும் அரசசார்பற்ற அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்துள்ளேன். ஆனால், இன்றுவரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை. தற்போது நல்லிணக்கச் செயலணியிடமும் எனது முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளேன்.

இச்செயலணியூடாகவேனும் எனக்குச் சாதகமான முடிவு கிடைக்க வேண்டுமென்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்' என்றார்.

'தற்போது நான் மிகவும் கஷ்;டத்திலுள்ளேன். அரசாங்கம் எதுவித உதவிகளையும் ஏற்படுத்தித்தரவில்லை. அரசசார்பற்ற அமைப்பொன்று 05 ஆடுகளைத் தந்தது.  கடன் பெற்று மாடு வாங்கியுள்ளேன். இவற்றை வளர்த்து அதில் வருமானத்திலேயே எனது 2 பிள்ளைகளையும் படிப்பித்தும் சீவியமும் நடத்துகின்றேன்.
நான் கஷ்டத்துடன் வாழ்ந்தாலும் பரவாயில்லை. எனது கணவரை எங்கிருந்தாலும் கண்டுபிடித்துத்தாருங்கள்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X