2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'மாடி வீடுகளாக மாற்ற சிலர் விண்ணப்பிக்கின்றனர்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ.ஹூசைன், எஸ்.பாக்கியநாதன்

ஓலைக்குடிசைகளில் மக்கள் வாழ்கின்ற நிலையில், சிலர் தங்களின் வீடுகளை மாடி வீடுகளாக மாற்றுவதற்கும் சிலர் வீடுகளில் இணைந்த குளியல் அறையை அமைப்பதற்குமாக வீடுகளுக்காக விண்ணப்பிக்கின்றனர் என திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுமத்தின் அமர்வு, மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் திங்கட்கிழமை (05) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.  

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், வீட்டுத்திட்ட உதவிகள் சில இடங்களில் உரியவர்களுக்குக் கிடைக்காமல் இருப்பதுடன், எதுவித பாதிப்பையும் எதிர்நோக்காதவர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பமும் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், வன்னியிலிருந்து மீள்குடியேறிய 550 பேருக்கும் எம்மிடம் பதிவுசெய்த முன்னாள் போராளிகள் 250 பேருக்கும்  நிரந்தர வீடுகளை இதுவரையில்  நிர்மாணித்துக்கொடுத்துள்ளோம். மேலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கும் வீடுகளை நிர்மாணித்துக்கொடுத்துள்ளோம். மிக நுணுக்கமாக ஆராயப்பட்டே இவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X