Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
முன்னாள் போராளிகளை சர்வதேச வைத்தியப் பரிசோதனைக்கு உள்வாங்குவதற்கான நடவடிக்கையை ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்டு, தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பார் வீதியை அண்டியுள்ள தோணாவைத் துப்புரவு செய்யும் கொத்தணி வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும் அதன் மூலம் 107 போராளிகள் மரணித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளுக்குநாள் தமிழ் சமூகம் கருவறுக்கப்பட்டு மீண்டும் உயிர்கள் காவு கொள்ளப்படும் வரலாறு தொடர்ந்தவண்ணமே உள்ளது. என்னதான் நல்லாட்சி என்று கூறினாலும் தமிழ் மக்களுக்கு முற்றுமுழுதான விமோசனம் கிடைக்கவில்லை என்பதை இங்கு வேதனையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், மட்டக்களப்பு மாநகரத்தினை சுத்தமாக வைத்திருக்கவேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கும் உள்ளது. மாநகர ஊழியர்கள் வருவார்கள் சுத்தம்செய்வார்கள் என்ற நிலையில் பொதுமக்கள் இருக்கக்கூடாது. இவ்வாறான வேலைத்திட்டங்களின்போது பொதுமக்கள் அதன் பங்காளிகளாக மாறவேண்டும். ஏனைய பகுதிகளில் மக்களின் பங்களிப்பு இவ்வாறான வேலைத்திட்டத்திற்கு வழங்கும்போது மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதி மக்கள் இதற்கு பங்களிப்பதில்லை. இதுகவலைக்குரிய விடயமாகும்' என்றார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago