Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்;டத்தில் கடந்த இரண்டு காலத்தில் இரண்டு அரச ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிலர் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியுள்ள நிலையில,; குறித்த சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்;.
இந்த மாவட்டத்தில் மண்டூரில் அபிவிருத்தி உத்தியோகத்தர் கொல்லப்பட்டு ஒன்றரை வருடங்களை கடந்துவிட்டது. அது தொடர்பிலான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லையென குடும்ப உறவினர்கள் எங்களிடம் கவலை தெரிவித்தனர்.
அதேபோன்று களுவாஞ்சிகுடியில் கிராம சேவையாளர் ஒருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பம் பெரும் கஷ்டத்தில் உள்ளதுடன் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டுள்ளது.அது தொடர்பிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாவட்ட செயலகத்தின் உள்ளக கணக்காளர் அவரது வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.அதற்குரிய தகவல்களை நாங்கள் வழங்கியிருந்தோம்.அது தொடர்பில் இதுவரையில் யாரும் கைதுசெய்யப்படவில்லை. அதேபோன்று மாநகரசபையின் ஆணையாளரின் வாகனமும் அவரது வீட்டில் வைத்து எரியூட்டப்பட்டது.இதுவரையில் எதுவித நடவடிக்கையும் இல்லை.
அரச உத்தியோகத்தர்கள் தங்களது கடமையினை சரியாக செய்யும் சூழ்நிலைக்கு எங்களுக்கான உத்தரவாதம் தரப்படுமாக என்ற கேள்வி எழுந்துள்ளது' என்றார்.
இது தொடர்பில் பதில் அளித்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயக்கொட ஆராய்ச்சி, அனைத்து பிரச்சினைகள் தொடர்பான விசாரணைகள் முறையான வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் சந்தேகம்கொள்ளத் தேவையில்லையெனவும் தெரிவித்தார்.
11 minute ago
25 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
31 minute ago