2025 மே 09, வெள்ளிக்கிழமை

'மாற்றுத்திறனாளிகளின் 14 அமைப்புகள் இயங்குகின்றன'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 13 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின்  அமைப்புகள் 14 இயங்கி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை அதிகாரி எஸ்.அருள்மொழி தெரிவித்தார்.

வாழ்வாதார உதவிகள் வழங்கும் நடவடிக்கை போரதீவுப்பற்று பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இவ்வாறு இயங்கும் அமைப்புகளில்; 09 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சுயமாக முன்னேற்றமடைந்து பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் அளவுக்கு அவர்கள் வளர்ந்துள்ளனர். அதேபோல், போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த மாற்றுத்திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும்  பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வளர்ச்சியடைய வேண்டும்.

போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள 120 மாற்றுத்திறனாளிகளுக்கு  மாதாந்த உதவித் தொகையாக தலா 3,000 ரூபாய் படி அரசாங்கம் வழங்கிவருவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X