Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சீர்தூக்கிப் பார்த்துப் பரிகாரம் தேட வேண்டும் என மேல் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.சுவர்ணராஜா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுமத்தின் அமர்வு, மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் திங்கட்;கிழமை (05) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கூறினார்.
யுத்தம் காரணமாக நேரடியாக அல்லது மறைமுகமாகப் பாதிக்கப்பட்ட ஒரு சிலரின் அனுபவங்கள் இந்த அமர்வில் முன்வைக்கப்பட்டன.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,'யுத்தம் இடம்பெற்றால், பேரழிவே மிஞ்சும். யுத்தத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதுடன், அநீதியே கிடைக்கும்.
யுத்தம் எவ்வாறான பின் விளைவுகளைத் தரும் என்பதை மூவின மக்களும் நன்கு உணந்துள்ளார்கள்' என்றார்.
'பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் அவதியுற்றதை அனுபவமாகக் கூறுகின்றார்கள். அது யுத்தம் ஏற்படுத்தியுள்ள அடையாள ஆதாரம். என்றாலும், இடம்பெற்ற சம்பவங்களை இடம்பெற்றவையாக வைத்துக்கொண்டு மேலும் மேலும் கொடூரங்கள் இடம்பெறாவண்ணம் வழிவகைகளைச் செய்ய வேண்டும். யுத்தம் காரணமாகப்; பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும்.
அவர்கள் உடல், உள மற்றும் பொருளாதார இழப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உயிரிழப்புகளை ஈடுசெய்ய முடியாது என்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான பொருளாதார உதவி அவர்களின்; வாழ்வாதாரத்துக்கு ஆதாரமாக அமையும்.
இந்த விடயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்துவதற்காக பொறுப்புள்ள அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் தங்களது கடமையைச் செய்ய வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago