Suganthini Ratnam / 2017 ஜனவரி 03 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்;, பேரின்பராஜா சபேஷ், கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, பெரியபுல்லுமலை 40ஆம் வட்டை வயல் வெளியில் திங்கட்கிழமை (02) மாலை காட்டு யானை தாக்கியதில், தும்பாலஞ்சோலைக் கிராமத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா பரமானந்தன் (வயது 73) என்பவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் இவர், மாடுகளைப் பட்டிக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த யானை இவரைத் தாக்கியுள்ளது.
யானையைக் கண்டதும் இவர் தப்பியோடிய வேளையில் தடக்கிக் கீழே விழுந்துள்ளார். இதை அடுத்து, யானை மிதித்துக் கொன்றதாகத்; தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago