2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ரயில் மோதி குடும்பஸ்தர் பலி

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்,எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை காலை  சென்றுகொண்டிருந்த உதயதேவி ரயில் மோதியதில், ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான முஹம்மது அலியார் செய்யது இப்றாகிம் (வயது 45) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

ஓட்டமாவடிப் பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் மேற்படி நபர் நடந்து சென்று கொண்டிருந்தபோதே விபத்துக்கு உள்ளானார்.

மேற்படி நபர்; உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X