Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டுமா அல்லது இணைக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் எமது கட்சித் தலைமைகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வை உடனடியாகக் காண வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார திணைக்களங்களில் கடமையாற்றும் பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'முஸ்லிம்களுக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழர்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளன. எந்த ஆட்சியாக இருந்தாலும், இந்த நாட்டிலுள்ள மூவின மக்களுக்கும் சமவுரிமை கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றோம்.
இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், எமது கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து தீர்வுத்திட்டத்தை முழுமையாக பெற்றுத்தர வேண்டிய தேவை உண்டு' என்றார்.
'இந்த நல்லாட்சியில் மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ்கின்ற நிலைமை காணப்படுகின்றது. மேலும், நல்லாட்சிக் காலத்தில் இந்த சுகாதாரத்துறை முன்னுதாரணமாக விளங்குகின்றது. இதனை மேம்படுத்தும் வகையில் வரவு -செலவுத் திட்டத்திலும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' எனவும் அவர் கூறினார்.

11 minute ago
25 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
31 minute ago