2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'வருடத்துக்கு 2,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுகின்றனர்'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

கிழக்கு மாகாணத்தில் வருடமொன்றுக்கு 2,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுகின்றனர். இந்த இடைவிலகல் முற்றாகத் தடுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாக் கல்வி வலயம், மண்முனை மேற்குக் கல்வி வலயம் ஆகியவற்றில் சுமார் 400 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் கூறினார்.

மட். தாழங்குடா ஸ்ரீவிநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றபோது, இதில் அதிதியாகக் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'பலவற்றை நாம் இழந்துள்ளோம். ஆனால், இழக்க முடியாத கல்விச் செல்வத்தை மேலோங்கச் செய்வதற்கு நாம் அனைவரும் செயற்பட வேண்டும்.

தற்போதைய இலங்கை அரசாங்கத்தை தமிழ் மக்கள் இன்னும் நம்பியுள்ளனர். 2015 ஜனவரி 8ஆம் திகதி சிறுபான்மை மக்களின் வாக்குப் பலத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நல்லாட்சி அரசாங்கம்,  ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்துள்ளது. இருப்பினும், எமது மக்களுக்காக ஒரு சில சாதகமான விடயங்களையும் மேற்கொண்டுள்ளது. சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் மீள்குடியேற்றங்;கள் இடம்பெறுகின்றன. தமிழ் அரசியல் கைதிகளில் சிலர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்படுகின்றனர்.  

இந்த நாட்டில் ஓர்  அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைத்து, அதனூடாக பாதிக்கப்பட்டுள்ள  சிறுபான்மை மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அரசாங்கம்  முனைகின்றது. அத்தீர்வு வடக்கு, கிழக்கு இணைந்ததாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டிக்; கட்டமைப்பை எமக்குத் தருவதாக இருக்க வேண்டும்.

எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் காணாமல் போனவர்களின் விவாதம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  இவர்களுக்குத் தேவையான நியாயபூர்வமான நிவாரணத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்' என்றார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X