Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை அமர்வில் தனிநபர் பிரேரணை ஒன்றினை கொண்டுவரவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் செவ்வாய்க்கிழமை(13) மாலை சென்று பார்வையிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.அவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர்,எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தவகையில், எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரி தனிநபர் பிரேரணை ஒன்றிணை கொண்டுவரவுள்ளேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
46 minute ago
56 minute ago
1 hours ago