Sudharshini / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல்-சக்திவேல்
மட்டக்களப்பு, செட்டிபாளையம் பிரதேச வைத்தியசசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நோயாளர் விடுதி சனிக்கிழமை(19) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணசபையின் 11 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இந்நோயாளர் விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.மிருனாளன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதயாகக் கலந்துகொண்டு விடுதியைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பி.இந்திரகுமார், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.துரைரெத்தினம், மா.நடராசா, ஞா.கிருஷ்ணபிள்ளை, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ரி.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், கிராம மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
3 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago