Niroshini / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
வினைத்திறன் மிக்க மாணவ சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு எமது சமூகம் முன்வரவேண்டும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை மாலை காரைதீவு இரமகிருஷ்ண மிசன் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற புலமைச்சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது சமூகத்தின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பது கல்வியே. எனவே, கல்வியை நாம் அனைவரும் எமது சந்ததிகளுக்கு எவ்வித தடைகளும் இன்றி பெற்றுக் கொடுப்பதற்கு உறுதுணையாக செயற்பட வேண்டும்.
எனது சேவைக் காலத்தில் என்னால் பெரும் பங்கினை கல்விக்காகவே செயற்படுவதற்காக திட்டமிட்டுள்ளேன். அது மட்டுமன்றி வீட்டுக்கு ஒவ்வொரு பட்டதாரிகளை உருவாக்குவதே எனது பெரும் கனவு.
கல்விக்காக பல்வேறுபட்ட சேவைகளை புரிவதற்காக பல துறை சார்ந்த நிபுணர் குழுவினரை ஒன்றிணைத்து கல்வி அபிவிருத்திக்குழுவை உருவாக்கியுள்ளேன்.அதன் மூலம் கல்விக்கு பல்வேறுபட்ட செயற்பாடுகளை தொடங்கவுள்ளேன்.
இக்கல்வி செயற்பாடுகளில் எல்லோரும் இன, மத பிரதேச வேறுபாடின்றி ஒருமித்து செயற்பட வேண்டும் என்றார்.

21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025