2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது'

Niroshini   / 2015 நவம்பர் 05 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கடந்த பத்து மாத காலப்பகுதியில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற தண்டனைக்குட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.டபிள்யூ.சி.பீ.கே.டி சில்வா இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான 10 மாத காலப்பகுதியில் மது போதையுடன் வாகனம் செலுத்தியமை தொடர்பில்  272 முறைப்பாடுகளும் வீதி சமிஞ்கைகளை மீறிய 24,379 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. மேலும், 56 வீதி விபத்துக்களும் பதிவாகியுள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டில் பத்து மாத காலப்பகுதியில் மது போதையுடன் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 59 முறைப்பாடுகளும் வீதி சமிஞ்கைகளை மீறியமை தொடர்பில்  18,723 முறைபாடுகளும் 98 வீதி விபத்துக்களும் பதிவாகியுள்ளன என்றார்.

மேலும்,இவ்வாறான குற்றங்கள் மற்றும் விபத்துக்களைத் தடுக்க பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், பொதுநல அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .