2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

4 வியாபாரிகள் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காலாவதியானதும் லேபல் இடப்படாதுமான இனிப்புப் பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் 04 வியாபாரிகள் மீது நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக காத்தான்குடிப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள 03 பழக்கடைகளிலும்; கடற்கரை வீதியிலுள்ள ஒரு பலசரக்குக் கடையிலும் காத்தான்குடி பொதுச் சுகாதாரப்  பரிசோதகர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீர்ச் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, காலாவதியானதும் லேபல் இடப்படாதுமான ஜெலி உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களையும் குளிர்பானங்களையும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X