2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'வில்பத்துக் காணிக்கான வர்த்தமானி அறிவித்தல் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 02 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வில்பத்துக் காணிக்கு அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள  வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனக் கிராமியப் பொருளாதாரப்  பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வு, கல்குடாவில்  சனிக்கிழமை (1) இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'வில்பத்துக் காணிக்கு விடுக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீள்பரிசீலனை செய்யப்படாவிடின்,  அதை நாம்; மீள்பரிசீலனைக்கு உட்படுத்த  வேண்டி வரும் என்ற விடயத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றது.

மேலும்,  நல்லாட்சியை  ஏற்படுத்த வேண்டும் என்று முதன்முதலில் களம் இறங்கி அதில் நாம் வெற்றி கண்டோம்.  ஆனால், தபால் மூலமான வாக்களிப்புக்குப் பின்னர் மனச்சாட்சியின்படி வாக்களியுங்கள் என்று   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் சொன்னார்கள். இந்த அரசாங்கத்தைக் கொண்டுவருதற்கு முக்கிய ஊன்;றுகோலாக செயற்பட்டுள்ளோம்' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .