2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'விஷ ஊசி விவகாரம்: ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்'

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பில் பிரச்சினைகள் உள்ளதாகவும் அது  தொடர்பில் விசாரணை நடாத்த வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் புனரமைப்பு, இந்துசமய விவகாரங்களுக்கான அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர், மட்டக்களப்பு சிறைச்சாலைக்கும் விஜயம் செய்து சிறைச்சாலைகளின் நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழ் அரசியல் கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்களின் விபரங்கள் கிடைக்கும். தற்போது 89பேர் உள்ளனர்.அவர்களில் யாருக்கு புனர்வாழ்வு அளிக்கமுடியும் என்ற வித்தில் தெரிவுசெய்யப்பட்டு நடவடிக்கையெடுக்கப்படும்.

இது தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடியுள்ளேன். பல வருடகாலமாக இந்த தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினைகள் உள்ளன. இதற்கு முடிவுகாணப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

கடந்தமுறை சில சட்டத்தரணிகள் புனர்வாழ்வு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக முடியாமல்போனது. எனினும் அரசியல்வாதிகளுடன் இது தொடர்பாக கதைத்துள்ளேன். இனி அவ்வாறான எதிர்ப்புகள் வராது என தெரிவித்துள்ளனர் என்றார்.

விஷ ஊசி ஏற்றபட்ட விவகாரம் தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது.யாரு ஏற்றினார்கள்,யாரு கொடுத்தார்கள் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.எனினும் அந்தப்பிரச்சினையுள்ளது.

இது தொடர்பில் விசாரணைசெய்தபோது சில போராளிகள் உண்மையாக சாதாரண நோய் காரணமாக இருந்துள்ளனர்.ஆனால் இருவர் ஏதோ ஒரு சுவீனம் காரணமாக இறந்தார்கள் என்ற தகவல் இருக்கின்றது.

எனினும், இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். விஷ ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. அதற்கு உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X