2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

காத்தான்குடி பலநோக்குக் கூட்டுறவுச்சங்க பணிப்பாளர் சபைக்கான தேர்தலில் இரண்டு பெண்கள் உட்பட 9பேர் வெற

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பலநோக்குக் கூட்டுறவுச்சங்க பணிப்பாளர் சபைக்கான தேர்தலில் இரண்டு பெண்கள் உட்பட 9பேர் வெற்றி பெற்றுள்ளதாக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.உசனார் தெரிவித்தார்.

காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபையை தெரிவு செய்வதற்கான கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.ஓ.காதர் தலைமையில் நடைபெற்றது.

இதில் காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் பொதுச்சபை அங்கத்தவர்கள் 100பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் பணிப்பாளர் சபைக்காக இரண்டு குழுக்களாக போட்டியிட்டதனால் தேர்தல் நடைபெற்றது.

இதில் 17பேர் போட்டியிட்டனர். இதன்போது இரண்டு பெண்கள் உட்பட 9பேரை தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்ட தேர்தலில் 7 ஆண்களும் இரண்டு பெண்களும் தெரிவு செய்யப்பட்டதாக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.உசனார் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X