2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டு. மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 427 பேர் கைது

Kogilavani   / 2012 ஜூலை 14 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                          (ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈபட்ட 427பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள்மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

அனுமதிபத்திரமின்றி மதுபானங்களை விற்றதாக இவர்கள்மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர், வாகரை, வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .