2026 மே 07, வியாழக்கிழமை

காத்தான்குடியில் இரு பஸ்கள் மோதி விபத்து; 10க்கும் மேற்பட்டோர் காயம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 27 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராண்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுக்குள்ளாகினர்.

இன்று பிற்பகல் 2.15 மணியளவில் கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச்சபைக்குரிய பஸ்சும் தனியார் பஸ்சுமே இவ்வாறு மோதிக்கொண்டன.

இதன்போது இரு பஸ்களிலும் பயணம் செய்த சுமார் 10க்கும் மேற்பட்டடோர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி வைத்தியாசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இலங்கை போக்குவரத்துச்சபைக்குரிய பஸ்ஸை தனியார் பஸ் முந்திச்செல்ல முற்பட்டபோது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • zafa Wednesday, 28 March 2012 02:52 AM

    இது கிராண்குளத்தில் இடம்பெற்ற விபத்து..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .