2026 மே 07, வியாழக்கிழமை

க.பொ.த. (சா.த) பரீட்சையில் சகல பாடங்களிலும் 'A' பெறுபேற்றினைப்பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரில்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

க.பொ.த. (சா.த) பரீட்சையில் சகல பாடங்களிலும் 'A' பெறுபேற்றினைப்பெற்ற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் புலமைப்பரில்களை வழங்கவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 'A' பெறுபேற்றினை சகல பாடங்களிலும் பெற்றிருந்தால் மாவட்ட இணைப்பாளர் மௌலவி எஸ்.எச்.அறபாத் ஸஹ்வி அவர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு முஸ்லிம் கல்வி முன்னேற்றச்சங்கத்தின் தலைவர் அஹ்மட் முனவ்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுயமுகவரி எழுதப்பட்ட ஐந்து ரூபாய் முத்திரை ஒட்டிய கடித உறையை பின்வரும் விலாசத்திற்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

எஸ்.எச்.எம்.அறபாத்
159, MPCS முன் வீதி,
மாவடிச்சேனை,
வாழைச்சேனை.
T.P. 0777761479

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .