2025 மே 01, வியாழக்கிழமை

நிரந்தர தடுப்பு அணை அமைப்பதற்காக 1100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2014 ஜனவரி 16 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் இடங்களில் நிரந்தர தடுப்பு அணை அமைப்பதற்காக 1100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரவேலியார் கிராமத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை தடுப்பதற்கான நிரந்தர அணை அமைப்பது தொடர்பாக கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் புதன்கிழமை (16) நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் மு.யோகராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் திருமதி பேரின்பமலர் மனோகரதாஸ், மீள்குடியேற்ற அதிகார சபை பணிப்பாளர் கே.சத்தியவரதன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால, கிராம சேவகர்களான ஆர்.சிறிதரன், கே.வாமதேவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரதியமைச்சர் முரளிதரன் இங்கு தொடரந்து உரையாற்றுகையில்,

'2010 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக எமது பிரதேச மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியதை நான் நேரடியாக வந்து பார்வையிட்டேன். இது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் காரணமாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 1100 மில்லியன் ரூபா நிரந்தர நிதி வெள்ள தடுப்பு அணை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அணை அமைக்கும் பணிகள் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளன.

அரசாங்கத்தின் பங்காளியாக இருப்பதன் காரணமாகவே இவ்வாறான வளங்களை என்னால் கொண்டுவரக் கூடியதாகவுள்ளது. நாங்கள் வளங்களை பெற்று பயன்பெறுவதோடு நின்றுவிடாமல் பங்காளிகளாக மாற வேண்டும். நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் எந்தவித அபிவிருத்தியையும் பெற முடியாது. அவர்கள் நாடாளுமன்றமோ மாகாண சபைக்கோ சென்று கூச்சலிடுவதைத்த தவிர எதுவும் செய்யப்போவதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 73 சதவீதம் தமிழ் வாக்குகள் உள்ளபோதிலும் மாகாண சபைக்கு ஒரு அமைச்சரைக் கூட அனுப்ப முடிவில்லை. இது எமது மக்கள் விட்ட பாரிய தவறு. முஸ்லிம்கள் அரசியல் பலத்தை சரியாக பயன்படுத்தி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று அவர்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்கின்றனர். எமது மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்கட்சி ஆசனத்திலிருந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .