2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சமுத்திர பல்கலையில் பயிற்சிகளை பூர்த்திசெய்த 15 பேருக்கு சான்றிதழ்கள்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 12 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, நாவலடியிலுள்ள இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் சமுத்திரப் பல்கலைக்கழகத்தில் பயிற்சிகளை பூர்த்திசெய்த 15 பேருக்கு  சான்றிதழ்கள் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கடலக இயந்திரப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, கடலக வரைபு வாசிப்பும் தொலைத்தொடர்பும் உள்ளிட்ட பயிற்சிகளை பூர்த்திசெய்தவர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சமுத்திரப் பல்கலைக்கழக கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் கல்லூரியின் உதவிப் பணிப்பாளர் ரி.சுபராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பல்கலைக்கழக பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எப்.எம்.ஹென்றிகெஸ், ரசிந்த துசார, போதனாசிரியர் கே.பாலச்சந்திரன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் ஊடக இணைப்பாளர் வி.ஜீவானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் தேவைகள், பிரச்சினைகள்; ஆராயப்பட்டு, பணிப்பாளர் நாயகத்தினால் அவற்றுக்கான  தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

சமுத்திரப் பல்கலைக்கழக கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் கல்லூரியில், தற்போது கடற்தள அதிகாரி, இயந்திரத்தொழில் நுட்பவியல் உள்ளிட்ட கற்கைகளை 60 பேர் வரையில் கற்றுவருகின்றனர்.

எதிர்வரும் வருடம்; இந்தப் பல்கலைக்கழகத்தில் வெளியிணை இயந்திரம் பழுதுபார்த்தல், கடலக இயந்திரவியல் தொழில்நுட்பம், கடற்றொழில் தொழில்நுட்பம், வெல்டிங்  தொழில்நுட்பம், ஸ்குவா சுழியோட்டம், உயிர்காப்பு பாடநெறி, நீச்சல், கடல் வரைபடம் வாசித்தல், தொடர்பாடல் மற்றும் சட்லைட் இயக்குதல், கடற்றொழில் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட சான்றிதழ் பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், டெக் அலுவலர், வைபர் கிளாஸ் தொழில்நுட்பம், நீர்வாழ் உயிரினச் செய்கை மற்றும் முகாமைத்துவம் உள்ளிட்ட டிப்ளோமா கற்கைகளும் நடைபெறவுள்ளதாக உதவிப் பணிப்பாளர் ரி.சுபராஜன் தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X