2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 37பேருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2012 ஜூலை 07 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                              (ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு வாகரை மாங்கேணியில் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்ட 40 பேரில் 37 பேரை ஜூலை 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

2 சிறுவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேற்படி 40 பேரையும் வாழைச்சேனை பொலிஸார் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

பொலிஸாரின் வாக்கு மூலத்தை கேட்டறிந்த மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம். றியாழ், ஒரு பெண் உட்பட 37 பேர்களை எதிர்வரும் 20.07.2012 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படியும் உத்தரவிட்டார்.

14 வயது சிறுவனை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்ட அவர், 3 வயது சிறுமியை விடுதலை செய்தார்.

5 வயதான மற்றொரு சிறுவன் தாயாரிடம் எச்சரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பரிகாரி ஜ.பி.ஜெயசீலன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .