2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மருத்துவச் சான்றிதழ் இல்லாத 4 உணவு விடுதி உரிமையாளர்களுக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வெட்டுக்காடு பொதுச் சுகாதார பகுதிகளில் மருத்துவச் சான்றிதழ் இல்லாத நான்கு உணவு விடுதிகளின் உரிமையாளர்களுக்கு  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் 24,000 தண்டம் விதித்துள்ளது.

மேற்படி உணவு விடுதிகளில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, மருத்துவச் சான்றிதழ் இல்லாத ஐந்து உணவு விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (02)  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது இரு உரிமையாளர்களுக்கு தலா 5,000 ரூபாய் படியும்  இரு உரிமையாளர்களுக்கு தலா 6,000 ரூபாய் படியும் தண்டம் விதிக்கப்பட்டது.
தண்டம் விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேற்றையதினம்  நீதிமன்றத்தில் ஆஜராகாமையால், அவருக்கு வேறு ஒரு தினம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்தார்.

வெட்டுக்காடு பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதார நலனை கருத்திற்;கொண்டு தொடர்ச்சியாக இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் அமுதமாலன் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X