2026 மே 14, வியாழக்கிழமை

வாகறையில் வீசிய சுழல் காற்றினால் 7 வீடுகள் 2 பொது கட்டிடங்கள் சேதம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று இரவு வீசிய சுழல் காற்றினால் ஏழு வீடுகள், இரண்டு பொதுக் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.

புனானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் கேணிநகர் கிராமத்தில் ஐந்து  வீடுகளின்  கூறைகள் சேதடைந்துள்ளதுடன் கிராம சேவகர் காரியாலயம் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடம் சேத மடைந்துள்ளது.

வாலமண்கேணி பிரதேசத்தில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடமும் சேதமடைந்துள்ளது.

சேத விபரங்களை வாகரை பிரதேச செயலக அதிகாரிகள் மதிப்பீட்டு வருகின்றனர் என்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.




 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .