2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதாந்தம் 12 மெட்ரிக்தொன் இறால்கள் பிடிப்பு

Kogilavani   / 2013 மே 28 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால்கள் (சீசன்) பிடிபடும் காலம் ஆரம்பமாகியுள்ளதால் மாதாந்தம் 12 மெட்ரிக்தொன் இறால்கள் பிடிபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

இவ்வாறு பிடிக்கப்படும் இறால்களில் மணல் இறால் கிலோ 400 ரூபாய் வீதமும்; வெள்ளை இறால் கிலோ 800 ரூபாய் வீதமும் விற்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இறால் அறுவடைக்காலம் ஆவணி மாதம் வரை நீடிக்கும் என்பதால்; ஆவணி மாத இறுதி பகுதியிலேயே இவ்வருடத்திற்கான இறால்பிடியின் மொத்த அளவை கணக்கிட முடியும் என்றும் இறால்கள் ஆரம்பத்தில் பிடிபடும் அளவை வைத்து ஒப்பிடும்போது கடந்த வருடத்தைவிட இவ்வருடம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாவித்தொழிலை நம்பி 11,750 குடும்பங்கள் வாழ்கின்றன.

மட்டக்களப்பு, வாழைச்சேனை, காவத்தைமுனை, கரையாக்கன்தீவு மற்றும் பனிச்சங்கேணி போன்ற இடங்களில் அதிகளவு இறால்கள் பிடிபடுகின்றன.

இதேவேளை வாழைச்சேனை, காவத்தைமுனை மற்றும் கரையாக்கன்தீவு போன்ற இடங்களில் நெக்டா நிறுவனத்தின் அனுசரணையோடு வளர்ப்பு இறால் பண்ணைகள் நிர்மாணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .