2026 மே 07, வியாழக்கிழமை

ஏறாவூர் புன்னைக்குடா வீதி 18 கோடி ரூபா செலவில் நிர்மாணம்

Kogilavani   / 2013 மே 16 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் புன்னைக்குடா வீதியை காபட் இட்டு நவீன வீதியாக மாற்றும் பணிகள் நேற்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த வீதி 180 மில்லியன் ரூபாய் செலவில் இருவழிப் பாழைதயாக நவீன முறையில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புன்னைக்குடா வீதியின் பாலங்களும் மற்றும் மதகு அமைப்புப் பணிகளும்; ஏற்கெனவே முடிவுற்றுள்ள நிலையில்; நேற்றைய தினம் வீதிக்குக் காபட் இடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஏறாவூர் நகரபிதாவும் முன்னை நாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அலிஸாஹிர் மௌலானா புன்னைக்குடா வீதிக்கு காபட்; இடும் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பல்வேறு அதிகாரிகளும்; பொதுமக்களும் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • Rasa Thursday, 16 May 2013 04:17 PM

    ஓ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .