2026 மே 09, சனிக்கிழமை

இலங்கை மெதடிஸ்த்த திருச்சபையின் 200 ஆண்டு நிறைவு விழா

A.P.Mathan   / 2013 ஜூன் 30 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்
 
இலங்கை மெதடிஸ்த்த திருச்சபை ஆரம்பிக்கப்பட்டு 200 ஆண்டுகளாவதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த்த திருச்சபை வளாகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
 
வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான தேவ மெதடிஸ்த்த திருச்சபையின் தலைவர் அருட்திரு தயாசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மெதடிஸ்த்த திருச்சபையின் இலங்கைக்கான தலைவர் அருட்திரு கலாநிதி ஏ.டபிள்யு.ஜெபநேசன் கலந்துகொண்டார்.
 
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் கிழக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
மெதடிஸ்த்த திருச்சபையின் 200ஆவது ஆண்டை முன்னிட்டு மட்டக்களப்பு வின்சன் பெண்கள் உயர்தர தேசியப் பாடசாலை முன்பாகவிருந்து அதிதிகள் பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டதனைத் தொடர்ந்து ஜெப வழிபாடும் இடம்பெற்றதுடன் 200ஆவது வருட பூர்த்தி நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக் கல் அதிதிகளால் திறந்துவைக்கப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .