2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மாவட்ட வறுமை நிலை 20.1 வீதமாக உள்ளது: சமுர்த்தி உதவிப் பணிப்பாளர்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

'மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலை 20.1 வீதமாக உள்ள நிலையில் தேசிய மட்டத்தில் 8 வீதமாகவே காணப்படுகின்றது என்று  மாவட்ட சமுர்த்தி உதவிப் பணிப்பாளர் பி. குணரெட்ணம் தெரிவித்தார்.

இதைக் கருத்தில் கொண்டே சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி சமுர்த்தி பயனாளிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது' என்று  குணரெட்ணம் தெரிவித்தார்.

புளியந்தீவு, சமுர்த்தி வங்கி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி சுய தொழில் அபிவிருத்தி கடன்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 சமுர்த்தி வங்கிகளில் பயனாளிகளின் குழு சேமிப்புப் பணம் 2000 மில்லியன் வைப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 சமுர்த்தி வங்கிகளிலும் இதுவரை 80,000 பேருக்கு 210, 750 மற்றும் 1000 ரூபாய் பெறுமதியான சமுர்த்தி உணவு முத்திரை வழங்குவதற்கு 55 மில்லியன் ரூபாய் மாதாந்தம் தேவைப்படுகின்றது. இதில் அரசானது 45 மில்லியனை மட்டுமே வழங்குகின்றது.

ஏனைய வர்த்தக வங்கிகளைப்போல் அதிக வட்டியை அறவிடாது 8 வீதமான வட்டியையே அறவிடுகின்றோம். ஜனசவிய திட்டத்தின் மூலம் வறுமை அகலாததன் காரணமாகவே சமுர்த்தி அறிமுகம் செய்யப்பட்டது எனத்தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .