2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை: 21 நேர்முகப்பரீட்சை

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்.

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் 2014 / 2016 கற்கை ஆண்டுக்கான புதிய ஆசிரிய மாணவர்களுக்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதி கலாசாலையில் நடைபெறவுள்ளது என்று காசாலையின்  அதிபர் ஏ.எஸ்.யோகராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் தற்பொழுது கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சமூகவிஞ்ஞானம் ஆகிய கற்கை நெறிகளில் பயிற்சிபெறும் ஆசிரிய மாணவர்கள் இவ் வருடம் மே மாதத்தில் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறுகின்றனர்.

மேலும், 05.02.2014 ல். கணிதம், விஞ்ஞர்னம், ஆங்கிலம், சமூக விஞ்ஞானம், இஸ்லாம் ஆகிய கற்கைநெறிகளில் பயிற்சி பெற புதிய ஆசிரிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார். அத்துடன், இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை கல்வி அமைச்சில் நடைபெற்று முடிந்துள்ளது.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலைக்குத் தெரிவு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களினதும் ஆவணங்களைப் பரிசீலனை செய்வதற்காக மற்றுமொரு நேர்முகப்பரீட்சைக்கு தனித்தனியாக ஏற்கனவே உரிய மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந் நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 21.01.2014 அம் திகதி கலாசாலையில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்வருட கற்கை நெறியில் 05.02.2014 தொடக்கம் புதிய அணி இணைத்துக் கொள்ளப்படவிருக்கின்றது.

இலங்கையிலுள்ள நான்கு தமிழ் மொழிமூல ஆசிரிய கலாசாலைகளிலும், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலைக்கு புதிய கற்கை ஆண்டுக்கு அதிக மாணவர்கள் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .