2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மனைவியை கொல்ல முயன்றவர் 25 வருடங்களுக்கு பின்னர் கைது

Gavitha   / 2014 நவம்பர் 22 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திக் காயப்படுத்தி விட்டு பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் 25 வருடங்களாக தலைமறைவாகியிருந்த கணவர், வெள்ளிக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த சீனித்தம்பி மகேஸ்வரி (வயது தற்போது 53) என்பவரை அவரது கணவரான கந்iயா வேலப்பு (தற்போது வயது 67) என்பவர் குடும்பத் தகராறு காரணமாக, மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்தி காயப்படுத்திய பின்னர் 25 வருடங்களாக தலைமறைவாகி இருந்துள்ளார்.

இதன்பின்னர், நீதி மன்றம் இவருக்கெதிராக பகிரங்கப் பிடியாணை பிறப்பித்திருந்தது. எனினும் அவர் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை (21) ஏறாவூர் பொலிஸ் பிரிவுற்குட்பட்ட ஐயன்கேணிக் கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்படும் போது, சந்தேக நபர் பைத்திய பிச்சைக்காரன் வேடத்தில் தகரக்பேணிகளை பொறுக்கிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாகவும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X